லத்வியா எல்லையில் ஐந்து இலங்கையர்கள் கைது!
லத்வியாவின் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் செல்ல முயன்ற இலங்கையர்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு எல்லையை கடக்க முயன்ற கார் ஒன்றில் இலங்கையர்கள் இருவர் இருந்ததாகவும், அவர்களிடம் செல்லுபடியாகும் லத்வியா வதிவிட விசா இருந்ததாகவும் எல்லைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அங்கிருந்த ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த ஏனைய 06 பேரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட 05 இலங்கையர்கள் மீதும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை லத்வியாவிற்கு அழைத்து வர முயற்சித்த குற்றத்திற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
லத்வியா குடியரசின் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக எல்லை தாண்டியவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால், கைது செய்யப்படும் இலங்கையர்களுக்கு இரண்டு முதல் எட்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.