பின்லாந்து துப்பாக்கிச்சூடு : தப்பியோடிய தாக்குதல்தாரி கைது!

பின்லாந்தில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தப்பியோடிய தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஹெல்சின்கியின் புறநகர்ப் பகுதியான வான்டாவில் உள்ள வியர்டோலா பள்ளியில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் 12வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்க, பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெருங்கிய உறவினருக்கு சொந்தமான உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியை வைத்திருந்த அவர், துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 15 times, 1 visits today)