வருடாந்தம் 5000 சிறார்கள் வன்முறைகளால் பாதிப்பு
ஒரு ஆண்டில் சுமார் 3500 சிறுவர் சிறுமியர்கள் பாரதூரமான வன் முறைகளுக்கும் 1500 பேர் சாதாரணமாக வன்முறைகளுக்கு உட்படுவதாகவும் விசாரணை சிறுவர் மகளிர் நன்னடத்தை பிரிவின் உதவிப் பொலிஸ்மா அதிபர் றேனுகா ஜயசுந்தர கூறுகிறார்.
இப்போது இணைய மற்றும் சமூக வலை தளங்கள் ஊடாக சிறார்கள் பல்வேறு பாலியல் இம்சைககளுக்கு இரையாகுவதாகவும் இதிலிருந்து சிறுவர்களை மீட்டெடுப்பது கஷ்டமான காரியமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த ஆபத்தான நிலையிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக சிறுவர் மகளிர் நலன்காப்பு பாதுகாப்பு பிரிவும் மற்றும் பொலிசார் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாகவும் சிறார்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்களை செயற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
(Visited 2 times, 1 visits today)