மத்திய கிழக்கு

அதிகரித்துள்ள போர் பதற்றம் ; லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து ‘வரையறுக்கப்பட்ட’ தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக லெபனானில் வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 1) அதிகாலை முதல் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது.லெபனானின் எல்லையில் இஸ்ரேலியப் படையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

“தெற்கு லெபனானில் உள்ள கிராமப்பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கியுள்ளனர், அவர்கள் வடக்கு இஸ்ரேலுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்தை ஏற்படுத்தலாம். நன்கு ஆராயப்பட்ட தகவல்களைக் கொண்டு தாக்குதல் தொடங்கியுள்ளது,” என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியது.தரையில் போரிடும் ராணுவ வீரர்களுக்குத் துணையாக வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அது குறிப்பிட்டது.

கடந்த சில நாள்களாக லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பலர் கொல்லப்பட்டனர். இருப்பினும் 1000க்கும் அதிகமான பொதுமக்களும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

Israel launches ground operation in southern Lebanon, Israeli military says  - The Washington Post

தற்போது இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கை மத்திய கிழக்கு வட்டாரத்தில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.காஸாமீதான தாக்குதலை கண்டித்து ஹிஸ்புல்லா இஸ்ரேலை தாக்கியது. அதற்கு பதிலடி தரும்விதமாக தற்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை தாக்கி வருகிறது.ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக ஈரான் களமிறங்கினால் இது முழுமையான போராக மாறலாம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

See also  வடக்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் ; ஹமாஸ் தளபதி மற்றும் குடும்பத்தினர் படுகொலை

இந்நிலையில் லெபானானில் பதுங்கியுள்ள பாலஸ்தீனத்தின் ஃபாடா அமைப்பின் தளபதிகளில் ஒருவரான முனீர் மக்தாவை குறிவைத்து செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதில் முனீர் என்ன ஆனார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சிடான் நகரத்தின் தெற்கில் உள்ளது. அங்கு பாலஸ்தீன அகதிகள் முகாம்கள் உள்ளன.

இதற்கிடையே இஸ்ரேல் சிரியாவிலும் தாக்குதலை தொடர்கிறது. தலைநகர் டமாஸ்கசில் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர், 9 பேர் காயமடைந்தனர்.இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பு எந்த கருத்துகளையும் வெளியிடவில்லை.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content