தீவிரமடையும் உக்ரைன்- ரஷ்ய போர் : இந்தியாவின் இரகசிய காய்நகர்த்தல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருடன் தனித்தனியாக தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு உரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இருவருடனும் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிலையில் உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா, அடுத்த வாரம் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு ஒரு உயர்மட்ட உக்ரைன் தலைவரின் முதல் வருகை இதுவாகும்
இந்தியப் பிரதிநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில் குலேபாவின் வருகை அமைகிறது என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான தொலைபேசி அழைப்பிற்குப் பிறகு, குலேபாவின் வருகை இடம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது