ENGvsIND – இங்கிலாந்து அணிக்கு 182 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் 2வது ஓவரில் சாகிப் மகமூது ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
ஷிவம் துபேவுடன், ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 181 ரன்களைக் குவித்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமூது 3 விக்கெட்டும், ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடுகிறது.
(Visited 12 times, 1 visits today)