இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 6ந் தேதி தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளது.
இந்த அணியில் புதுமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹல் அறிமுகமாகிறார்.
டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், ஜோஷ் ஹல், ஷோயிப் பஷீர்.
(Visited 1 times, 1 visits today)