Site icon Tamil News

10 ஆயிரம் இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

இஸ்ரேலின் உள்துறை அமைச்சர் மோஷே ஆர்பெல் மற்றும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையில் உடன்படிக்யொன்று எட்டப்பட்டுள்ளது.

உடன்படிக்கையின்படி  10,000 இலங்கைப் பண்ணை தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்த இஸ்ரேல் அனுமதிவழங்கியுள்ளது.

கடந்த வாரம் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு விவசாயத் துறைக்காக 5,000 தொழிலாளர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இவ்வாறு உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் விவசாயத் துறை போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 முதல், விவசாயத் துறையில் 30,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களில் சுமார் 8,000 வெளிநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஹமாஸ் – இஸ்ரேல் போரைத் தொடர்ந்து ஏறக்குறைய 20 ஆயிரம்  பாலஸ்தீனிய விவசாயத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் முதல் இலங்கை விவசாயத் தொழிலாளர்கள் எதிர்வரும் வாரங்களில் நாட்டைவிட்டு புறப்பட வேண்டும். ஏற்கனவே இலங்கையைச் சேர்ந்த 4,500 தொழிலாளர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் வீட்டு பராமரிப்புத் துறையில் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version