இலங்கை செய்தி

வெளிநாடு ஒன்றில் 6,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

6,000 இலங்கை தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்பவுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

பராமரிப்பாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் துறைக்கான தொழிலாளர்களையே ஜப்பானுக்கு அனுப்புவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின் பேச்சாளர் சஞ்சய நல்லபெரும தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 3,223 தொழிலாளர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதாக தெரிவித்த அவர், திறமையான தொழிலாளிக்கு இலங்கை பெறுமதியில் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உற்பத்தி, மீன்பிடி மற்றும் கட்டுமானத் தொழில்களில் இந்த ஆண்டு 10,000 தொழிலாளர்களை தென் கொரியாவுக்கு அனுப்பவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் நல்லபெரும தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை