கொழும்பு வெள்ளவத்தையில் கடை உரிமையாளர் தாக்கியதில் ஊழியர் பலி
கடை உரிமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் ஜம்பட்டா தெருவை சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட கடை உரிமையாளரை கைது செய்துள்ள வெள்ளவத்தை பொலிஸார் , தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் இடம்பெற்றதாகவும் , அதில் பணியாளர் உயிரிழந்துள்ளதாகவும் , சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
(Visited 3 times, 1 visits today)