குப்பை பையில் விடப்பட்ட பிறந்த குழந்தையை தூக்கிச் சென்ற நாய்
லெபனானின் திரிபோலி நகரில் குப்பை பையில் விடப்பட்ட பிறந்த குழந்தையை தூக்கிச் சென்ற நாய் பற்றி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தையை நகரத்தில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு வெளியே விடப்பட்டது, பின்னர் நாய் பையை எடுத்துக்கொண்டு தெருக்களில் நடந்து சென்றது.
நாய் அவ்வாறே சென்று கொண்டிருந்த போது குப்பை பைக்குள் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பயணி ஒருவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பையை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
பின்னர், குழந்தையை அருகில் உள்ள இஸ்லாமிய தொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிகாரிகளின் தலையீட்டில், குழந்தை திரிபோலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
குழந்தையின் முகம் மற்றும் உடல் முழுவதும் கீறல்கள் மற்றும் காயங்கள் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த செய்தியுடன், குழந்தையை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து பலர் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆனால் சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சிசுவை கைவிட்டு சென்றவர்களைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.