யாழில் துண்டாடப்பட்ட கையை வெற்றிகரமாக பொருத்திய வைத்தியர்கள்
யாழ்.போதனா வைத்தியசாலையில் இரண்டுதுண்டுகளாகத் துண்டிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே, நீண்ட நேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக மீண்டும் கை பொருத்தப்பட்டு இளைஞன் வீடு திரும்பியுள்ளார்.
குறிப்பிட்ட சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்
அனைவருக்கும் வைத்தியசாலை சமூகம் சார்ந்த நன்றி என வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
(Visited 4 times, 1 visits today)