Site icon Tamil News

கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை!

கத்தார் நாட்டில் ஓராண்டுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் இன்று (26.10) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

8 கடற்படை வீரர்களில் கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் சவுரப் வசிஷ்த், கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் அமித் நாக்பால் மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கத்தாரில் உள்ள இந்தியத் தூதரும் அவரது துணைத் தூதரும் அவர்களை அக்டோபர் முதலாம்  திகதி சந்தித்தனர், அக்டோபர் 3ஆம் திகதி அவர்களின் ஏழாவது விசாரணைக்கு முன், தூதரக அணுகல் வழங்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இந்திய அதிகாரிகளும் தொடர்ந்து தொடர்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version