Site icon Tamil News

கனடாவில் கடுமையான வெப்பத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து

கனடாவில் கடுமையான வெப்பத்தால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கோடைக்காலத்தில் கடுமையான காட்டுத் தீயை கனடா எதிர்நோக்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்பாராத நெருப்புப் பருவம் தொடங்கியதால் கனடாவில் கடுமையான வெப்பமும் வறட்சியும் நீடிக்கின்றன.

தற்போது கனடா முழுவதும் 413 இடங்களில் காட்டுத் தீ பற்றியெரிகிறது. அவற்றுள் 249 இடங்களில் நெருப்பு கட்டுக்கடங்காமல் உள்ளது.

மேற்கே உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து (British Columbia) கிழக்குக் கடற்கரையின் நோவா ஸ்கோஷா (Nova Scotia) வரை 3 மில்லியன் ஹெக்டருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு பொசுங்கிப் போனது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயின் பாதிப்பைவிட அது 12 மடங்கு அதிகமாகும். அல்பர்ட்டா (Alberta), நோவா ஸ்கோஷா, கியூபெக்(Quebec) ஆகிய மாநிலங்கள் மத்திய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளன.

சுமார் 26,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். அண்மை ஆண்டுகளில் மோசமான வானிலை மாற்றத்தால் கனடா அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

Exit mobile version