Site icon Tamil News

CWC – பங்களாதேஷிடம் தோல்வி அடைந்த இலங்கை அணி

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி இலங்கை முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 279 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக Charith Asalanka அதிகூடிய ஓட்டங்களான 108 ஓட்டங்களை பெற்றார். இது Charith Asalanka சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற 2 ஆவது சதமாகும்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Tanzim Hasan Sakib, 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் எஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது ஸ்டம்புக்கு வர மிகவும் தாமதமாகிவிட்டதால் ‘Time Out’ அறிவிப்புடன் Run out வீரராக அறிவிக்கப்பட்டு துரதிஷ்டவசமாக வெளியேறினார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் இதுபோன்ற ஆட்டமிழப்பு இடம்பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் Najmul Hossain Shanto அதிகபட்சமாக 90 ஓட்டங்களையும், அணித்தலைவர் Shakib Al Hasan 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தில்ஷான் மதுசங்க 3 விக்கெட்டுக்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் மஹீஷ் தீக்‌ஷன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணித் தலைவர் சகிப் ஹல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.

Exit mobile version