கண்டி வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!
கண்டி வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் பெரிடோனிட்டிஸ் நோயை வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தில் துகள்கள் கலந்திருப்பதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் வைத்தியசாலை பணிப்பாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மடிவத்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (15.07) நேற்று கண்டி வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவுக்கு விஜயம் செய்ததாகவும் மடிவத்த தெரிவித்துள்ளார்.
குறித்த திரவத்தை பாவனையிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.