இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பின!

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் போராட்டங்களை முன்னெடுத்திருந்த நிலையில், இன்று (10.10) நீதிமன்ற நடவடிக்கைகள் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளன.
வட மாகாணம், கிழக்கு மாகாணத்திலுள்ள சட்டத்தரணிகளுடன் கொழும்பிலுள்ள சட்டத்தரணி களும் நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, இதுவரை நீதிமன்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட வடக்கு சட்டத்தரணிகள் அனைவரும் இன்று முதல் பணிக்கு திரும்ப தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் பா.தவபாலன் தெரிவித்தார்.
அதேபோல் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளன.
(Visited 11 times, 1 visits today)