Site icon Tamil News

கொழும்பில் சிகரெட்டுகளுடன் கொள்கலன் சிறைபிடிப்பு

சுங்கவரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் கொள்கலன் வாகனம் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் கொள்கலனை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

கொள்கலனில் அதிகளவு சுங்கவரி இல்லா சிகரெட்டுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் கொள்கலன் மற்றும் அதன் சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த கொள்கலனில் சுமார் 10,060,000 ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்கலன் ஒருகுடவத்தை கொள்கலன் பிரிவுக்கு கொண்டு செல்லப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Exit mobile version