பிரேசிலின் மேயர் வேட்பாளர் விவாதத்தில் மோதல்
பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்றுக்கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேட்பாளரான பாப்லோ மார்கல் தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது, ஜோஸ் லூயிஸ் டேடெனா என்பவர் திடீரென நாற்காலியால் தாக்கியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத பாப்லோ மார்கலுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மார்பு மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இதனிடையே தொலைக்காட்சியில் விவாதத்தை நடத்திய நடுவர் விவாதத்தை நிறுத்தி விளம்பரங்களை ஒளிப்பரப்பு செய்தார். பின்னர் பாப்லோ மார்கல் இல்லாமலே விவாதம் தொடர்ந்தது.