செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காக நினைவேந்தல் அனுஷ்டிப்பு
செஞ்சோலையில் விமான தாக்குதில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களின் நிணை வேந்தன் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இன்றைய நாள் 2006ம் ஆண்டு தலைமைத்துவ பயிற்சிக்காக கூடியிருந்த பாடசாலை மாணவர்கள் மீது ஸ்ரீலங்கா வான் படையினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 53 மாணவர்கள் உட்பட 57 பேர் படுகொலை செய்யப்பட்ட நாளினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று நினைவு கூர்ந்தனர்.
யாழ்ப்பாணம் நூல் நிலையத்திற்கு முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன் போது அணையில் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு செல்வராஜா கஜேந்திரன் யாழ்ப்பாணத்திற்கு அவர் வருகை தந்தால் நாம் தலையை கொடுத்தேனும் எமது இடத்தையும், மக்களையும் காப்பாற்றுவோம் என தெரிவித்தார்.
அத்துடன் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் பல்வேறு இடங்களில் விகாரைகள் காணப்பட்டன ஆனால் அவர்கள் எந்த விகாரனையும் சேதப்படுத்தவில்லை பௌத்த மதத்திற்கு எதிராக மக்களை திசை திருப்பவும் இல்லை என்றார்.