கோவை கனமழை – லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் நீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி பேரிடர் குழு நடவடிக்கை
கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதில் மாநகரில் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடியது.
இதில் கோவை லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்காாமல் இருக்க கோவை மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு குழுவினர் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் சுரங்கப்பாதை மூடப்படாமல் வாகனங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது. மேலும் ரயில் நிலையம் அருகே உள்ள பாதாள சாக்கடையிலும் நீரை தேங்க விடாமல் உடனடியாக டேங்கர் மூலமாக மாநகராட்சி பேரிடர் குழுவினர் அப்புறப்படுத்தினர்.
(Visited 15 times, 1 visits today)