மனித மூளைக்குள் சிப் – எதற்காக இந்த ஆராய்ச்சி?
டெஸ்லா மற்றும் SpaceX தலைமை நிர்வாக அதிகாரியான எலோன் மஸ்க் நியூராலிங்க் (Neuralink) என்ற மனித மூளை – கணினி இடைமுக நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம், அதன் சிப்பை முதல் முறையாக மனித மூளைக்குள் வெற்றிகரமாக செலுத்தியிருப்பதாகவும், சோதனைக்குட்பட்டவர் தற்போது நன்றாக முன்னேற்றம் கண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை எலான் மஸ்க் சமூக வலைதளம் மூலம் அறிவித்தார்.
என்ன தொழில்நுட்பம் இது?
நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு டெலிபதி (Telepathy) என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம், மனித சிந்தனையின் மூலம் தொலைபேசி அல்லது கணினியை கட்டுப்படுத்தலாம் என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நியூராலிங்க், மூளைக்குள் மிக மெல்லிய நூல்களைப் பொருத்தும் திறன் கொண்ட தையல் இயந்திரம் போன்ற சாதனத்தை உருவாக்கியுள்ளது என்பதே இதனை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் உதாரணமாகும். நியூரான்களின் குழுக்களில் இருந்து தரவைப் படிக்கக்கூடிய மின்முனைகளுடன் தனிப்பயன் – வடிவமைக்கப்பட்ட சிப்புடன் நூல்கள் இணைக்கப்படுகின்றன.
நியூராலிங்க் கடந்தாண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) இருந்து மனித சோதனைகளுக்கான ஒப்புதலைப் பெற்றது. கடந்த செப்டம்பரில் ஆறு வருட ஆரம்ப சோதனைக்கான முதல் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் நியூராலிங்க் நிறுவனம் கூறியது. “நியூரோலிங் முதல் மனிதரிடம் உள்வைக்கப்பட்டது மற்றும் நன்றாக அவர் குணமடைந்து வருகிறார்” என்று எலான் மஸ்க் அவரின் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் விளக்கம்
“ஆரம்ப முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரான் ஸ்பைக் கண்டறிதலைக் காட்டுகின்றன,” என்று அவர் மேலும் தனது X பக்கத்தில் தெரிவித்திருந்தார். முதல் நியூராலிங்க் தயாரிப்பு டெலிபதி என்று அழைக்கப்படுகிறது என்றும் எலான் மஸ்க்தான் உறுதி செய்தார்.
இது உங்கள் ஃபோன் அல்லது கணினியின் கட்டுப்பாட்டை செயல்படுத்தும், மேலும் அவற்றின் மூலம் கிட்டத்தட்ட எந்த சாதனமும் சிந்தனை மூலம் இயக்கலாம் என எலான் மஸ்க் விளக்கமளித்தார். மேலும், தெரிவித்த அவர்,”இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப பயனர்கள் தங்கள் கைகால்களை பயன்படுத்துவதை இழந்தவர்களாக இருப்பார்கள்.
மமறைந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் இதனை பயன்படுத்தியிருந்தால், வேகமாக தட்டச்சு செய்பவர் அல்லது ஏலதாரரை விட வேகமாக தொடர்பு கொண்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். அதுதான் எங்களின் குறிக்கோள்” என்று மஸ்க் தெரிவித்தார் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நியூராலிங்க் நிறுவனம் அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் (SEC) தாக்கல் செய்த தகவலின்படி, வென்சர் கேப்பிடல் மூலம் கூடுதலாக 43 மில்லியன் அமெரிக்க டாலரை திரட்டியதாக தெரிவித்துள்ளது. பீட்டர் தியேலின் நிறுவனர் நிதியத்தின் தலைமையில் நிறுவனம் தனது முந்தைய தவணையை ஆகஸ்ட் தொடக்கத்தில் $280 மில்லியனில் இருந்து $323 மில்லியனாக உயர்த்தியதாக தாக்கல் காட்டுகிறது.