உலகிலேயே அதிவேக இணையம் சீனாவில்
சீனாவில் வினாடிக்கு 1.2 டெராபிட் வேகம் கொண்ட இணையச் சேவை தன்னிடம் உள்ளதாகச் அறிவித்துள்ளது.
பல நாடுகளில் இயங்கும் இணையச் சேவையை விட இது பன்மடங்கு வேகமானது.
பெய்ஜிங் நகரை அந்நாட்டுத் தெற்குப் பகுதியுடன் இணைக்கும் 3,000 கி.மீ. நீள இணையக் கட்டமைப்பை, ஹுவாவே டெக்னாலஜீஸ் கம்பெனி, சீனா மொபைல் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்களும் அமைத்துள்ளன.
இது அதன் தொழில்நுட்பத்தின் அதிநவீன சாதனை என்று சீனா பெருமிதம் அடைந்துள்ளது.
ஸிங்ஹுவா பல்கலைக்கழகத்துடனும் ஸெர்நெட்காம் கார்ப் ஆய்வு நிறுவனத்துடனும் ஹுவாவே, சீனா மொபைல்ஸ் ஆகியன கூட்டாக செயல்பட்டு இதனைத் தயாரித்துள்ளன.
உலகில் எங்குமில்லாதது எனக் கருதப்படும் இச்சேவை, நிலைத்தன்மை, நம்பகத்தன்மை போன்றவற்றை உறுதிசெய்துள்ளதாகச் சீனா கூறுகிறது.
எப்படியிருப்பினும் சீனாவின் இந்தத் தயாரிப்பின் உண்மைத் தன்மையை இன்னும் உறுதிசெய்யவில்லை என்று புளும்பர்க் செய்தி நிறுவனம் கூறியது.