Site icon Tamil News

காசாவில் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தைகள்!

காசாவில் நடைபெற்றுவரும் போர் காரணமாக எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், கையிருப்பும் தீர்ந்துள்ளது.

இந்நிலையில் காசா மருத்துவமனையில் இன்குபேட்டர்களில் சிகிச்சைப்பெற்றுவரும் பச்சிளங் குழந்தைகள் உயிருக்கு போராடி வருவதாக ஐ.நா குழந்தைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய பிராந்தியத்தின் சுகாதார அமைச்சின் படி, அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதிக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஏற்கனவே 1,750 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

“தற்போது 120 பிறந்த குழந்தைகள் இன்குபேட்டர்களில் உள்ளனர், அவர்களில் 70 குழந்தைகள் புதிதாக பிறந்த நிலையில்,   இயந்திர காற்றோட்டத்துடன் உள்ளனர். இந்த விடயத்தில் நாங்கள் அக்கரைக் கொண்டுள்ளோம்” என யுனிசெப் செய்தித் தொடர்பாளர் ஜொனாதன் கிரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version