ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை
Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.
Bard என்று பெயரிடப்பட்டுள்ள அது இன்னும் சில வாரங்களில் வெளியிடப்படும் என்று Google நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார்.
அது இணையத்தில் உள்ள தகவல்களைக் கொண்டு உயர்தரமான பதில்களை அளிக்கக்கூடியது என்று அவர் குறிப்பிட்டார்.
அதன் பதில்கள் பாதுகாப்பானவை என்றும் உண்மையான உலகத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
(Visited 13 times, 1 visits today)