ஆசியா

ஒரு இரவு கூட தாக்குப் பிடிக்காது ; இந்தியாவின் திட்டத்தை கேலி செய்த சீனா

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறும் அரிய காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ நேற்று வெளியிட்டது.

உலகின் எந்த நாடுமே நுழைந்திடாத நிலவின் தென்துருவத்தில் இந்தியா தடம் பதித்து உள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கடந்த 23ம் திகதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியது.அதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில் லேண்டரில் இருந்த 26 கிலோ பிரக்யான் ரோவர் வெளியேறி நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்து உள்ளது. இதன் மூலம் நிலவு ஆராய்ச்சியில் இந்தியா சரித்திர சாதனை படைத்து உள்ளது. இதனை உலகம் முழுவதும் உள்ள செய்தித்தாள்கள் மிகவும் பாராட்டி செய்திகளை வெளியிட்டன.

நிலவில் தரையிறங்கியதும், லேண்டரும், ரோவரும் தங்கள் பணிகளை திட்டமிட்டபடி மேற்கொள்ள தொடங்கிவிட்டன. நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு விதமான ஆய்வுகளை இந்த கருவிகள் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றன.அத்துடன் நிலவின் மேற்பகுதியில் இருந்து பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு தளத்துக்கு அனுப்பி வருகின்றன. அந்தவகையில் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறும் காட்சிகள் வீடியோவாக எடுக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. லேண்டரில் உள்ள நவீன கேமரா மூலம் இது எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவை இஸ்ரோ நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது.

See also  தென்கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து விமானப் பயிற்சி

With India's One Giant Step, Chandrayaan 3, Moon Race Heats Up

அதில், ‘சந்திரயான்-3 ரோவர், லேண்டரில் இருந்து நிலவின் மேற்பரப்புக்கு எப்படி சென்றது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்திய விஞ்ஞானிகளின் படைப்புகள் மற்றொரு கிரகத்தில் மிகவும் சிறப்பாக செயல்படும் இந்த அரிய காட்சிகள் காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. இதற்கிடையே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர், கடந்த 2019ம் ஆண்டு அனுப்பப்பட்டு இன்றும் நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது. சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள நவீன கேமரா எடுத்து அனுப்பிய இந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டு இருந்தது.

நிலவின் மேற்பரப்பில் ரோவரின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், அது 8 மீட்டர் அளவுக்கு நகர்ந்திருப்பததாக கூறியுள்ளனர். மிகக்குறைந்த செலவில் செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் பல நாடுகளால் பாராட்டப்பட்டது. இது குறித்து பலவேறு நாட்டின் ஊடகங்கள் பாராட்டி செய்திகள் வெளியிட்டன. ஆனால் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாக கருதப்படும் குளோபல் டைம்ஸ், இந்தியாவின் விண்வெளி திட்டத்தை சீனாவுடன் ஒப்பிட்டு சந்திரயான் திட்டத்தை கேலி செய்து உள்ளது.

See also  பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ; ஐவர் பலி, 15 பேர் காயம்

Chandrayaan-3 launch date: What to expect from India's mission to Moon's  south pole | The Independent

குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் பல்வேறு துறைகளில் இந்தியாவை விட சீனா முன்னணியில் உள்ளது. 2010ல் சாங்இ-2 ஏவப்பட்டதில் இருந்து, சீனா ஒரு ஆர்பிட்டர் மற்றும் லேண்டரை நேரடியாக பூமி-நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பி உள்ளது. ஏவுகணை வாகனங்களின் குறைந்த திறன் காரணமாக இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் இல்லை. சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்பம் நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துகிறது. சீனா பயன்படுத்தும் எரிபொருள் மிகவும் மேம்பட்டது. சீனாவின் ரோவர் 140 கிலோ எடை கொண்டது, இந்தியாவின் ரோவர் பிரக்யான் 26 கிலோ எடை மட்டுமே. இந்தியாவின் பிரக்யான் நிலவில் ஒரு நாள் மட்டுமே நீடிக்கும்.

நிலவு இரவை தாக்குபிடிக்க முடியாது (ஒரு சந்திர நாள் என்பது 14 பூமி நாட்களுக்கு சமம்.) இதற்கு மாறாக, சீனாவின் யுடு-2 ரோவர் நிலவின் மேற்பரப்புக்கு அருகில் உள்ளது. நீண்ட காலம் பணிபுரிந்த சாதனையை இது கொண்டுள்ளது. ஏனென்றால், அது அணுசக்தியுடன் கூடியது, அதனால் அது நீண்ட நேரம் செயல்படும். இந்தியாவும் சீனாவும் விண்வெளித் துறையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று குளோபல் டைம்ஸ் கூறுகிறது. சீனாவின் விண்வெளித் திட்டத்துடன் ஒத்துழைக்க விரும்பும் எந்தவொரு நாட்டிற்கும் சீனா திறந்திருக்கும் என்றும் அந்த குளோபல் டைம்ஸ் கூறுகிறது. இந்தியாவின் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றுவதில் சீனா ஆர்வமாக உள்ளது என்பதை குளோபல் டைம்ஸ் மறைமுகமாக சுட்டி காட்டி உள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content