செய்தி வட அமெரிக்கா

கனடாவின் வருடாந்த பணவீக்கம் மே மாதத்தில் அதிகரிப்பு

கனடாவின் வருடாந்த பணவீக்கம் மே மாதத்தில் 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (25) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டது.

சேவைகளுக்கான விலை அதிகரிப்பால் பணவீக்க அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது.

சேவைகளுக்கான விலைகள் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 4.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கால கட்டத்தில் பொருட்களின் விலை ஒரு சதவீதம் உயர்ந்தது. கடந்த வருடத்தை விட May மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை 1.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மளிகைப் பொருட்களின் விலை 1.4 சதவீதம் உயர்ந்தது. ஏப்ரல்  மாதம் வருடாந்த பணவீக்கம் 2.7 சதவீதமாக இருந்தது.

இந்த மாத ஆரம்பத்தில் கனடிய மத்திய வங்கி, அதன் வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
See also  பாலஸ்தீன குடும்பங்களை நாடு கடத்த இஸ்ரேல் சட்டம் இயற்றுகிறது
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content