Site icon Tamil News

பிரித்தானியா எடுத்த திடீர் தீர்மானம் – கவலையில் இஸ்ரேல்

இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை பிரித்தானியா நிறுத்தியது

சர்வதேச சட்டத்தை மீறுவதற்கு உரிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதாலேயே பிரித்தானியா இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாம்மி அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30ஐ இடைநிறுத்த பிரித்தானியா முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்த உரிமங்களை இடைநிறுத்துவது தடை அல்லது ஆயுதத் தடை போன்றது அல்ல என்றும், சர்வதேச சட்டத்தின்படி இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை பிரித்தானியா தொடர்ந்து ஆதரிக்கிறது என்றும் அவர் கூறினார்.

போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்களுக்கான உதிரி பாகங்கள் தடை செய்யப்பட்ட ஆயுதங்களில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த முடிவு தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயுத ஏற்றுமதி தொடர்பான முடிவு உட்பட பிரிட்டிஷ் அரசு எடுத்த முடிவுகளால் தனது நாடு “ஏமாற்றம்” அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version