Site icon Tamil News

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை பிரிட்டன் அமைக்கும் – ரிஷி சுனக் உறுதி!

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை பிரிட்டன் அமைக்கும் என்று பிரதமர் ரிஷி சுனக் இன்று (26.10) அறிவித்துள்ளார்.

AI நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிபுணர்களை நவம்பர் 1-2 திகதிகளில் Bletchley Park இல் ஒன்றுக்கூடி AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்நிலையில் AI பாதுகாப்பில் பிரிட்டன் உலகளாவிய தலைவராக இருக்க வேண்டும் என்று சுனக் விரும்புகிறார். பிரெக்ஸிட்டிற்குப் பிறகு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியிடும் பொருளாதார தொகுதிகளுக்கு இடையே ஒரு பங்கை உருவாக்குகிறார்.

சுமார் 100 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில், AI இன் கணிக்க முடியாத முன்னேற்றங்கள் மற்றும் மனிதர்கள் அதன் கட்டுப்பாட்டை இழக்கும் சாத்தியம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version