இங்கிலாந்து அணியின் வெள்ளை பந்து பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் நியமனம்
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார்.
மெக்கல்லம் வந்த பிறகு ‘பேஸ்பால்’ என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.
அண்மையில், இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து ஜூலை 30 ஆம் தேதி மேத்யூ மோட் விலகினார்.
இந்நிலையில் இங்கிலாந்து ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக பிரென்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அனைத்து வகைகளிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மெக்கல்லம்.
(Visited 14 times, 1 visits today)