இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியது – 21 பேர் மாயம்
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர்.
வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்தாலியை நெருங்கியபோது சேதமடைந்து கடலில் மூழ்கியது.
கடலில் தத்தளித்த 7 பேர் கடலோர காவல் படையினரால் மீட்கப்பட்டனர்.
ஐரோப்பாவில் தஞ்சமடைவதற்காக மத்திய தரைக்கடலை கடக்கும்போது கடந்தாண்டு 2,500 பேர் கடலில் மூழ்கி இறந்ததாகவும், நடப்பாண்டில் இதுவரை ஆயிரத்து 47 பேர் இறந்ததாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)