இலங்கை

இலங்கை : வவுனியாவில் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்

வவுனியா, பட்டாஞ்சிவூர் பகுதியில் நேற்றிரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் ஆதரவாளர்களுக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காதர் மஸ்தான் மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகிய இருவரும் குறித்த பகுதியில் தமது இறுதி அரசியல் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். காதர் மஸ்தானின் ஆதரவாளர்கள் ரிஷாத் பதியுதீனின் வாகனம் மீது […]

இந்தியா

இந்தியா – மணிப்பூரில் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்த முயற்சி ; 10 பேரைக் கொன்ற பாதுபாப்பு அதிகாரிகள்

  • November 12, 2024
  • 0 Comments

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்றின்மீது தாக்குதல் நடத்த முயன்ற பத்து பேரைப் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.இந்தச் சம்பவம் நவம்பர் 11ஆம் திகதியன்று நிகழ்ந்தது. ஆயுதம் ஏந்திய அந்தப் பத்து பேருக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூரில் உள்ள குக்கிஸ் சமூகத்துக்கு வழங்கப்படும் சிறப்புப் பொருளியல் சலுகைகள், அரசாங்க வேலை, கல்வி தொடர்பான சலுகைகள் மெய்ட்டிஸ் சமூகத்துக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் கடந்த ஆண்டு […]

மத்திய கிழக்கு

காசாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : குழந்தைகள் உள்பட பத்திற்கும் மேற்பட்டோர் பலி!

  • November 12, 2024
  • 0 Comments

காசாவில் இரண்டு இஸ்ரேலிய தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் உட்பட குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். எட்டு சர்வதேச உதவிக் குழுக்கள் வெளியிட்ட அறிக்கையில், போரினால் அழிக்கப்பட்ட காசா பகுதிக்கு அதிக மனிதாபிமான அணுகலை அனுமதிக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையை இஸ்ரேல் நிறைவேற்றத் தவறிவிட்டதாக தெரிவித்துள்ளது. பைடன் நிர்வாகம் கடந்த மாதம் இஸ்ரேலுக்கு மேலும் உணவு மற்றும் பிற அவசர உதவிகளை காசாவிற்குள் “அதிகரிக்க” அழைப்பு விடுத்தது. […]

உலகம்

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானம் மீது துப்பாக்கி பிரயோகம்!

  • November 12, 2024
  • 0 Comments

ஹைட்டி தலைநகர் மீது பறந்த இரண்டு வணிக விமானங்கள் துப்பாக்கிச் சூட்டில் தாக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானம் புளோரிடாவில் உள்ள ஃபோர்ட் லாடர்டேலில் இருந்து வந்த போர்ட்-ஓ-பிரின்ஸில் தரையிறங்குவதற்கு சில மீட்டர் தூரத்தில் இந்த தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவும் காட்சிகள், ஒரு விமான ஊழியர் படம்பிடித்ததாக நம்பப்படுகிறது. பின் கதவுக்கு அருகே ஒரு தோட்டா விமானத்திற்குள் நுழைந்து மேல்நிலை லாக்கர்களைத் தாக்கிய துளையைக் காட்டுகிறது. இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட விமானி விமானத்தை […]

வட அமெரிக்கா

டிரம்ப் செனட்டர் மார்கோ ரூபியோவை வெளியுறவுத்துறை செயலாளராக நியமிக்க வாய்ப்பு

  • November 12, 2024
  • 0 Comments

அமெரிக்க செனட்டர் மார்கோ ரூபியோவைத் தமது வெளியுறவு செயலாளராக டோனல்ட் டிரம்ப் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக நவம்பர் 11ஆம் திகதி தகவல் அறிந்த தரப்புகள் தெரிவித்துள்ளன. இதன்வழி, டிரம்ப் ஜனவரியில் அதிகாரபூர்வமாகப் பதவியேற்றபின், ஃபுளோரிடாவில் பிறந்த ஓர் அரசியல்வாதி அமெரிக்காவின் ஆக உயர்மட்ட அரசதந்திரியாகும் முதல் லத்தீன் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருப்பார். வெளியுறவு அமைச்சர்க்கான டிரம்ப்பின் பட்டியலில், மிகக் கடுமையாகக் குரல்கொடுக்கக்கூடியவர் செனட்டர் ரூபியோ என்று கூறப்படுகிறது. சீனா, ஈரான், கியூபா உட்பட அமெரிக்காவின் புவிசார் எதிராளிகள் […]

ஐரோப்பா

ஆங்கில கால்வாயில் ஹைப்பர்சோனிக் ஏவுகணை பயிற்சிகளை மேற்கொண்ட ரஷ்யா!

  • November 12, 2024
  • 0 Comments

ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஷ்ய கடற்படை போர்க்கப்பல் ஆங்கில கால்வாயில் பயிற்சிகளை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ப்ராஜெக்ட் 22350 போர்க்கப்பல் அட்மிரல் கோலோவ்கோ – சேனல் வழியாக சென்றதாக ரஷ்யாவின் அரசு ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதில் சிர்கான் ஹைப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த கேனலில் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள் மற்றும் ஆபத்தான இலக்குகளைத் தவிர்ப்பதற்கான பயிற்சிகளை நடத்தியjாக தெரிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், அட்மிரல் கோலோவ்கோ, நவம்பர் 2 […]

பொழுதுபோக்கு

இலங்கையில் அமரன் செய்த வசூல் சாதனை எவ்வளவு தெரியுமா?

  • November 12, 2024
  • 0 Comments

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராவார். அஜித் விஜய் ரஜினி என்ற வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இடம்பிடித்துள்ளார் என்றால் பொறுத்தமானதாகத்தான் இருக்கும். இந்த நிலையில், இவர் நடிப்பில் அமரன் படம் கடந்த தீபாவளிக்கு வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அமரன் உலகம் முழுவதும் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதோடு இலங்கையில் அமரன் படம் 10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். […]

இலங்கை

இலங்கை : ராஜகிரியவில் பற்றி எரிந்த ஆடை தொழிற்சாலை!

  • November 12, 2024
  • 0 Comments

ராஜகிரிய, மெத வெலிக்கடை வீதியில் அமைந்துள்ள தற்காலிக ஆடைத் தொழிற்சாலை கட்டிடத்தில் தீ பரவியுள்ளது. தீயை கட்டுக்குள் கொண்டுவர கோட்டே தீயணைப்புத் திணைக்களத்தின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயினால் ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

நடிக்கும் போதே கண்ணை மூடிய சமந்தா… திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்

  • November 12, 2024
  • 0 Comments

சமீபத்தில் வெளியான சீட்டாடல் வெப் தொடரை பார்த்த ரசிகர்கள், “என்ன ஒரு நடிப்பு, அற்புதம் சம்மு” என பாராட்டி வருகிறார்கள். ஒரு பெண் குழந்தையை சமந்தா வளர்க்கும் விதம் பற்றி பலரும் பாராட்டுகிறார்கள். மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே சமந்தா கஷ்டப்பட்டு இந்த தொடரில் நடித்துள்ளார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வருண் தவான், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த Citadel: Honey Bunny வெப்தொடர் அமேசான் பிரைமில் ரிலீஸாகியுள்ளது. பல […]

இலங்கை

அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கை – இலங்கையின் விசேட கோரிக்கை

  • November 12, 2024
  • 0 Comments

அமெரிக்க விடுத்த பயண எச்சரிக்கையை அந்த நாடு நீக்கிக்கொள்ளவேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. அறுகம்குடா தொடர்பில் அண்மையில் அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 23ம் திகதி அறுகம்குடாவில் தாக்குதல் இடம்பெறலாம் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வேண்டுகோள்விடுத்தது அறுகம்குடாவில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் தாக்குதல் இடம்பெறலாம் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் […]