இலங்கை செய்தி

கொழும்பிலிருந்து சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி – மனைவி பலி

  • November 12, 2024
  • 0 Comments

களுத்துறை, மொரகஹஹேன கோணபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் கணவன் மற்றும் பிள்ளைகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளை மறுதினம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் கிராமத்திற்கு முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, லொறியுடன் இன்று பிற்பகல் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. பெத்தேவத்தை, மித்தெனிய பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான சம்பிகா உதயங்கனி என்ற 34 வயதான பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்துக்குள்ளான […]

இலங்கை செய்தி

காதலன் ஏமாற்றியதால் 29 வயது இளம் ஆசிரியை மரணம்!

  • November 12, 2024
  • 0 Comments

காதலன் கைவிட்டதால் முன்பள்ளி ஆசிரியை ஒருவர் தனது வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவம் இன்று (12) மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. மொனராகலை நக்கல்லை யொவுன் கிராமம், நக்கலவத்தை  முன்பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்த 29 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியை காதல் முறிவு காரணமாகவே உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இலங்கை செய்தி

வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் சைபர் தாக்குதல்!

  • November 12, 2024
  • 0 Comments

சைபர் தாக்குதலுக்கு உள்ளான வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையதளம் தற்போது மீட்கப்பட்டு வருவதாக கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் இணையத்தளம் கடந்த முதலாம் திகதி சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தர் சாருக தமுனுபொல, “நவம்பர் முதலாம் திகதி, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக குறித்த திணைக்களம் அறிவித்திருந்தது. இந்த சைபர் தாக்குதலால் வளிமண்டலவியல் திணைக்களத்தின் […]

இலங்கை செய்தி

சேனல் – 4 குறித்து விசாரணை – பிள்ளையானை விசாரணைக்கு அழைப்பு

  • November 12, 2024
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளி அமைப்பு ஒன்றினால் காணொளி தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தொலைக்காட்சியான செனல் 4 தொலைக்காட்சியினால், இலங்கையரான ஆசாத் மௌலானா என்ற மொஹமட் மிஹிலால் மொஹமட் ஹப்சீருடன் நேர்காணல் ஒன்றை நடத்தியது. இந்த நேர்காணல் , 2023 […]

இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும்! சீமான் வலியுறுத்தல்

இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார் . தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டவிரோதமாக எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசாநாயக்க கூறியதை சுட்டிக்காட்டினார் . “இலங்கையில் தமிழர்கள் சுடப்பட்டுள்ளனர், அவர்களின் மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறியுள்ளார். தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை என்ன […]

இலங்கை செய்தி

மது அருந்திய 4 பேரில் இருவர் உயிரிழப்பு

  • November 12, 2024
  • 0 Comments

காலியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்திய 4 பேரில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏனைய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிட்டிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தக்க பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மதுபானத்தை நேற்றிரவு (11) 4 பேர் குடித்துவிட்டு ஒவ்வாமை காரணமாக எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி மத்தக்க மாரக்கொட பகுதியைச் […]

இலங்கை செய்தி

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

  • November 12, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய் – கைதடி வீதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்ட வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆசியா செய்தி

பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இனப்படுகொலை – சவுதி இளவரசர் கண்டனம்

  • November 12, 2024
  • 0 Comments

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் நடைமுறை ஆட்சியாளருமான முகமது பின் சல்மான் அல் சவுத், முஸ்லிம் மற்றும் அரபு தலைவர்களின் உச்சி மாநாட்டில் பேசிய போது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய “இனப்படுகொலை” என்று கண்டித்துள்ளார். “சகோதர பாலஸ்தீனிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலையை இராச்சியம் தனது கண்டனத்தையும் திட்டவட்டமாக நிராகரிக்கிறது” என்று பட்டத்து இளவரசர் அரபு இஸ்லாமிய உச்சிமாநாட்டில் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கவும், ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கவும் சர்வதேச […]

இலங்கை

கொழும்பில் உடல் மசாஜ் நிலையமொன்றில் நடந்த மோசடி: தம்பதிகள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது

தனிநபரிடம் ரூ.1 மில்லியன். பணப்பரிமாற்றம் செய்ய வற்புறுத்திய குற்றச்சாட்டில் தம்பதிகள் உட்பட ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலப்பிட்டியில் உடல் மசாஜ் நிலையம் ஒன்றிலே இச்சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு உடல் மசாஜ் செய்வதாக அழைத்து அவர் வந்தவுடன் சேவை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். இருப்பினும், இடத்தை அடைந்ததும், அவரை தம்பதியினர் மிரட்டி தாக்கினர், அவர்கள் ரூ.1 மில்லியனை ஆன்லைன் வங்கி பரிமாற்றம் செய்யுமாறு மிரட்டியுள்ளனர் என பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிய்வ்துள்ளன்ர். அத்துடன் சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்டவரின் பணப்பையில் இருந்து […]

செய்தி விளையாட்டு

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை அறிவித்த ICC

  • November 12, 2024
  • 0 Comments

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ICC கவுரவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ICC அறிவித்திருந்தது. ICC வெளியிட்ட பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தானின் நோமன் அலி, தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் நியூசிலாந்தின் மெலி கெர், தென் ஆப்பிரிக்காவின் […]