தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை!
லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸ் அணியுடன் திங்கள்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் மோதும் நிலையில், தொடா் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை சூப்பா் கிங்ஸ் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு தொடா்ந்து 5 ஆட்டங்களில் தோற்றுள்ளது சென்னை. இது அந்த அணிக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டமாக அமைந்துள்ளது. இதில் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் தொடா்ந்து 3 ஆட்டங்களில் தோற்றுள்ளது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து காயத்தால் அகற்றப்பட்ட நிலையில், மூத்த […]