பிரபாகரனை விட்டு பிரிந்தது ஏன்?: இந்தியா என்ன செய்தது? கருணா அம்மான் விளக்கம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் யாரையும் வளர விடுவதற்கு அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அச்சம் காணப்பட்டமையினால், அவர் அதனை விரும்ப மாட்டார் என அந்த அமைப்பின் முன்னாள் தளபதியும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார். பிபிசி தமிழ் உடனான நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், இலங்கை அரசாங்கத்தற்கும் இடையில் 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. நோர்வேயின் மத்தியஸ்தத்தின் கீழ் […]