காஷ்மீர் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிஷ்த்வார் மாவட்டத்தில் சாத்ரூ பகுதியில் நயீத்காம் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இதற்கு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த துப்பாக்கி சண்டையில், பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெயிஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களில் முக்கிய தளபதியாக செயல்பட்ட சைபுல்லாவும் ஒருவர். அவர் ஓராண்டாக ஜீனப் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிர […]