இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும். […]