விளையாட்டு

12 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி எடுத்த தீர்மானம்

  • January 16, 2025
  • 0 Comments

வரவிருக்கும் ரஞ்சி டிராபி முதல் தரக் கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் ஆடப்போவது உறுதியான நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடுமையாக சொதப்பினாலும் ஓய்வு அறிவிக்க மனம் வராத விராட் கோலி தன் ஃபார்மை மேம்படுத்திக் கொள்ள டெல்லி அணிக்காக ஆடுவார் என்று உத்தேச அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், கோலி இன்னமும் ஆடுவாரா மாட்டாரா என்ற சந்தேகமே நீடிக்கிறது. அவர் லண்டனுக்குச் சென்று விட்டார். அவர் இனி இங்கு வந்து உள்நாட்டுக் கிரிக்கெட் ஆடுவதெல்லாம் சாத்தியமில்லை […]

உலகம்

உடற்பருமனால் போராடும் மக்கள் – விளக்கத்தை மாற்றியமைக்க முயற்சியில் நிபுணர்கள்

  • January 16, 2025
  • 0 Comments

உலகில் தற்போது ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் உடற்பருமனாக உள்ள நிலையில் உடற்பருமனைத் தீர்மானிக்கும் வழியை மாற்ற நிபுணர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உலகெங்கும் மருத்துவர்கள் தற்போது Body Mass Index (BMI) எனும் உடல் எடையையும் உயரத்தையும் வைத்து உடற்பருமனைக் கண்டறிகின்றனர். எனினும் அது மட்டும் போதாதென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோய்கள், ஒருவரின் இடுப்பளவு போன்ற அம்சங்களையும் கருத்தில் கொள்வது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். 56 நிபுணர்களும் 76 மருத்துவ அமைப்புகளும் ஆதரவளிக்கும் கட்டமைப்பைப் பற்றி The […]

ஐரோப்பா

பிரித்தானியாவுக்கு சட்டவிரோத உயிராபத்தான கடற்பயணம் – சிக்கிய 76 பேர்

  • January 16, 2025
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோத உயிராபத்தான கடற்பயணம் மேற்கொண்டிருந்த 76 அகதிகள் கலே கடற்பிராந்தியத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை இரவு இக்கடற்பயணத்தை பா-து-கலே மாவட்டத்தின் வடக்கு பகுதியில் அகதிகள் மேற்கொண்டிருந்தனர். காற்று ஊதக்கூடிய படகு ஒன்றில் குறித்த 76 அகதிகளும் பயணித்திருந்தனர். அகதிகளின் கடற்பயணத்தை பார்த்துவிட்டு ஜொந்தாமினர் தகவல் தெரிவிக்க, அவர்களை சட்டவிரோத கடற்பயணத்தை கண்காணிக்கும் சிறப்பு அமைப்பான Cross Gris-Nez அதிகாரிகள் மீட்டிருந்தனர். கடந்த ஆண்டு மிக அதிகமான அகதிகள் கலே மற்றும் நோர் […]

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் பல லட்சம் பேர் தொழில்களை இழக்கும் அபாயம் – ட்ரம்பால் நேர்ந்த விபரீதம்

  • January 16, 2025
  • 0 Comments

கனடாவில் சுமார் ஐந்து லட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரி விதித்தால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் கனடாவின் ஏற்றுமதிகள் மீது வரியை விதித்தால் மாகாணத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் தொழில்களை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜெர்மனியில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுப்பதில் சிக்கல் – சுற்றிவளைக்கும் துப்பறியும் அதிகாரிகள்

  • January 16, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அதன் உண்மைத்தன்மையை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் நியமித்து வருகின்றன. ஜெர்மனியில் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களின் நோய்வாய்ப்பட்ட விடுப்பு (Sick Leave) விகிதம் தொடர்ந்து வருவதாக பல நிறுவனங்கள் கூறி வந்தன. இந்த நிலையில், பணியாளர்கள் உண்மையில் நோய்வாய்ப்பட்டிருக்கின்றனரா என்பதை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன. பணியாளர்களின் வருகை பற்றாக்குறை அதிகரிப்பதால் நிறுவனங்களின் வரவு செலவுகளில் நிலைமை பாதிக்கப்படுவதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. […]

இலங்கை செய்தி

இலங்கையில் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் 100 ரூபாய்க்கு பாண் வழங்க முடியும்

  • January 16, 2025
  • 0 Comments

இலங்கையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைக்கும் பட்சத்தில், பாண் ஒன்றினை 100 ரூபாவில் நுகர்வோருக்கு வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை பேக்கரி சங்கப் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர். அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன உள்ளிட்ட பேக்கரி உரிமையாளர்கள் குழு இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டது. டொலரின் விலை […]

இலங்கை செய்தி

இலங்கை: சட்டவிரோத மான் மற்றும் மறை கொம்புகளுடன் நால்வர் கைது

  • January 15, 2025
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் மான், மறை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சங்கு வகைகள் என்பவற்றை 13 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சித்த உயர்தர பாடசாலை மாணவன் உட்பட நால்வர் அலவ்வ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, புத்தளம் – கருவலகஸ்வெவ மற்றும் குருநாகல் வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உடவலவ, கேகாலை, தெனாலேகம மற்றும் கட்டுநாயக்க […]

ஆசியா செய்தி

ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் வங்கதேச பிரதமர் கலிதா ஜியா விடுதலை

  • January 15, 2025
  • 0 Comments

வங்காளதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் 79 வயது கலிதா ஜியா. இவர் தனது ஆட்சிக்காலத்தில் ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளையின் பெயரில் அரசாங்க நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது. […]

உலகம் செய்தி

தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் தொற்றால் 8 பேர் உயிரிழப்பு

  • January 15, 2025
  • 0 Comments

தான்சானியாவில் மார்பர்க் வைரஸ் பரவியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், நாட்டின் வடமேற்கில் உள்ள ககேரா பிராந்தியத்தின் இரண்டு மாவட்டங்களில் மொத்தம் ஒன்பது பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. “நோய் கண்காணிப்பு மேம்படுவதால், வரும் நாட்களில் மேலும் வழக்குகள் எதிர்பார்க்கப்படும்” என்று WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் Xல் பதிவிட்டுள்ளார். டான்சானியாவின் தேசிய ஆய்வகத்தில் வெடிப்பை உறுதிப்படுத்த இரண்டு […]

இலங்கை செய்தி

இலங்கை: ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நீதிமன்ற ஊழியர் ஒருவர் கைது

  • January 15, 2025
  • 0 Comments

10 கிராம் 800 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்த நீதிமன்ற ஊழியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் பணியாற்றும் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் கஹவத்தை பகுதியில் வசிப்பவர், அதே நேரத்தில் அந்தப் பகுதிக்குள் ‘ஐஸ்’ போதைப்பொருட்களை விநியோகிப்பதில் அவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் தற்காலிகமாக தங்கியிருந்த வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டார்.