விளையாட்டு

கைவிட்ட அணியை பதிலடி கொடுத்த கே.எல்.ராகுல்! லக்னோ உரிமையாளர் அதிர்ச்சி

  • April 23, 2025
  • 0 Comments

கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம் இருந்து விரக்தியை பெற்றுக்கொண்டார் என்று சொல்லலாம். லக்னோ உரிமையாளர் அவரை கடுமையாக திட்டும்படியான புகைப்படங்களும் வெளியாகி மிகவும் வைரலானது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு அதாவது இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளின் மெகா ஏலத்தின் போது லக்னோ நிர்வாகம் கே.எல்.ராகுலை விடுவித்து ரிஷப் பண்டை ரூ.27 கோடி கொடுத்து கேப்டனாகிக்கியது. இந்த சூழலில், எப்போது லக்னோ அணிக்கும் […]

உலகம்

அமெரிக்க மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடை விதித்த சீன அரசாங்கம்

  • April 23, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளை அடுத்து அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதியை சீனா அரசு நிறுத்தி உள்ளது. சீனாவின் உணவகங்களில் மிக பிரபல உணவாக இருந்த அமெரிக்க மாட்டிறைச்சி இனி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதற்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய உள்ளதாக சீன இறக்குமதியாளர்கள் கூறியுள்ளனர்.

இலங்கை

இலங்கையில் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

  • April 23, 2025
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும், இன்று காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, […]

ஆசியா

பாகிஸ்தானில் சுமார் 22 மில்லியன் யாசகர்கள் – 42 பில்லியன் ரூபாய் சம்பாதிப்பதாக தகவல்

  • April 23, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் சுமார் 22 மில்லியன் யாசகர்கள் இருப்பதாகவும், அவர்கள் ஆண்டுதோறும் குறைந்தது 42 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய்களை சம்பாதிக்கிறார்கள் என்றும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளார். யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வெளிநாடுகளில் நாட்டின் பிம்பத்திற்கு ஒரு கறை ஏற்பட்டுள்ளதென அவர் கூறுகிறார். பாகிஸ்தான் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களிடையே தனது சொந்த ஊரான சியால்கோட்டில் உரையாற்றும் போது அந்நாட்டின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக ஊடக […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

சிகிச்சை பலனின்றி டேன் பிரியசாத் உயிரிழப்பு – உறுதிப்படுத்திய பொலிஸார்

  • April 23, 2025
  • 0 Comments

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிகிச்சை பலனின்றி டேன் பிரியசாத் உயிரிழந்ததாக தற்போது பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது அறிவித்துள்ளனர். அரசியல் செயற்பாட்டாளர் டொன் பிரியசாத் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். கொழும்பு, மீதொட்டமுல்லையில் உள்ள ‘லக்சந்த செவன’ அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே டொன் பிரியசாத் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வீட்டுவசதி நெருக்கடி – குடியேற்றத்தைக் குறைக்க திட்டம்

  • April 23, 2025
  • 0 Comments

மேற்கு சிட்னி பகுதி குடியேறிகளால் நிறைந்துள்ளதாக மேற்கு சிட்னி மேயர் தெரிவித்துள்ளார். வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய நாடு குடியேற்றத்தைக் குறைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கடந்த வாரம் அறிவித்ததைத் தொடர்ந்து குடியேற்றம் ஒரு பரபரப்பான விடயமாக மாறியது. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் உள்ள மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் மிகவும் போட்டி நிறைந்த வாடகை சந்தையுடன் போராடி வருகின்றனர், அதே நேரத்தில் வீட்டு விலைகள் சாதனை அளவை எட்டியுள்ளன. ஆஸ்திரேலிய அரசாங்கம் நாட்டை மக்கள்தொகையைக் […]

ஆசியா

சிங்கப்பூர் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியர்

  • April 23, 2025
  • 0 Comments

சிங்கப்பூர் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட இந்திய நாட்டவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 28 வயதுமிக்க விமான பணிப்பெண்ணிடம் சீண்டலில் அவர் ஈடுப்பட்டதாவும், இந்நிலையில் அவர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமான பணிப்பெண், பெண் பயணி ஒருவரை கழிப்பறைக்கு அழைத்துச் சென்றுள்ளார், ​​அப்போது கழிப்பறையின் தரையில் ஒரு டிஷ்யூ பேப்பர் கிடந்துள்ளது. அதை எடுக்க பணிப்பெண் குனிந்தபோது, குறித்த நபர் பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டதுடன் தன்னோடு சேர்த்து கழிவறைக்குள் தள்ளியதாக […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

கொழும்பில் சாரதிகளை சுற்றிவளைக்கும் CCTV கமராக்கள் – பொலிஸார் எச்சரிக்கை

  • April 23, 2025
  • 0 Comments

கொழும்பில் விதிகளை மீறிய 4000க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரை சூழ பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்களின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் கொழும்பின் பல பகுதிகளில் CCTV கமராக்கள் பொருத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார். போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை CCTV கமராக்கள் ஊடாக கண்டறியும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் […]

ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

சவுதி அரேபியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பும் இந்திய பிரதமர் மோடி

  • April 22, 2025
  • 0 Comments

பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றார்.தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்று இறங்கினார். பிரதமர் மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அங்கு சென்றார். இந்தநிலையில், 2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளதாகவும்,உடனடியாக நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

மாஸ்கோவின் கிழக்கே உள்ள ரஷ்ய வெடிமருந்து கிடங்கில் குண்டுவெடிப்பு

  • April 22, 2025
  • 0 Comments

மாஸ்கோவின் கிழக்கே உள்ள ஒரு ரஷ்ய வெடிமருந்து கிடங்கில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேற்கு விளாடிமிர் பிராந்தியத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு நிலையத்தில் உள்ள ஒரு வெடிமருந்து கிடங்கில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த இடம் ரஷ்ய இராணுவத்திற்கான ஒரு முக்கிய வெடிமருந்து சேமிப்பு தளமாக நம்பப்படுகிறது. சேமிப்பு கட்டிடத்தில் தீப்பிடித்த பின்னர் வெடித்த வெடிமருந்துகள் வெடித்ததாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது. கிர்ஷாச் மாவட்டத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Skip to content