ஜப்பானில் தொடர்ச்சியாக 44 ஆவது ஆண்டாக பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள சரிவு!
ஜப்பானில் பிறப்பு விகிதம் குறைந்து வரும் நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. புதிதாக வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 44 வது ஆண்டாக பிறப்பு விகிதம் வீழ்ச்சிடைந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் வெளிநாட்டினர் உட்பட 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 350,000 குறைந்து 13.66 மில்லியனாக உள்ளது என்று உள்துறை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் மொத்த மக்கள் தொகையில் குழந்தைகள் வெறும் 11.1 சதவீதம் மட்டுமே, இது நாட்டின் மக்கள்தொகையில் புதிய சாதனை […]