பொழுதுபோக்கு

முடிவுக்கு வரும் நயன்தாராவின் சகாப்தம் – அம்மணிக்கு இது கொஞ்சம் ஓவர் தான்

  • January 23, 2025
  • 0 Comments

சமீப காலமாக நயன்தாரா பல சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். தனுஷை விமர்சித்ததில் தொடங்கி சமீபத்தில் மதுரையில் நடந்த விழா வரை எல்லாமே பரபரப்பு தான். அது மட்டும் இன்றி இப்போதெல்லாம் அவருடைய ஆட்டிட்யூட் அதிகமாகவே இருக்கிறது. பணம் புகழ் இதில் மட்டுமே அவருடைய கவனம் இருப்பதாக திரையுலகில் வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. அதிலும் திருமணத்திற்கு பிறகு தான் அவருடைய ஆட்டம் அதிகமாகி விட்டது. இதற்கு விக்னேஷ் சிவன் தான் காரணம் என வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி தெரிவித்துள்ளார். […]

மத்திய கிழக்கு

காஸாவில் போர் நிறுத்தம் – வீடுகளுக்குத் திரும்பிய மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • January 23, 2025
  • 0 Comments

காஸாவில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து வீடுகளுக்குத் திரும்பிய மக்களின் வீடுகளும் தரைமட்டம் ஆகிவிட்டதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்து காணப்படும் காஸாவில், இஸ்ரேல் ராணுவம் விட்டுச் சென்ற கவச வாகனங்களை பாலஸ்தீனர்கள் ஆதங்கத்துடன் பார்த்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை தொடர்ந்து முகாம்களிலிருந்து சொந்த வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கிய மக்கள், அனைத்தும் தரைமட்டமாகிவிட்டதால் தங்களுக்குத் தங்க இடமில்லை என வேதனை தெரிவித்தனர்.  

வட அமெரிக்கா

அமெரிக்காவில் மீண்டும் காட்டுத் தீ – 19,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலை

  • January 23, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகே ஏற்பட்டுள்ள புதிய காட்டுத் தீச்சம்பவத்தில் சுமார் 8,000 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது. கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயால் 19,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். பலத்த காற்று தீயை மேலும் தீவிரப்படுத்தியது. இதற்கு முன்னர் எரிந்த பெருந்தீயை அதிகாரிகள் கட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர். சில மணி நேரத்தில் மேலும் ஒரு தீச்சம்பவம் ஏற்பட்டது. சுமார் 1,100 தீயணைப்பாளர்கள் அயராது உழைக்கின்றனர். நிலைமை குறித்து கவனத்தோடு இருக்கும்படி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் Green அட்டைக்கு விண்ணப்பிப்பர்களுக்கு டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

  • January 23, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ஏற்கனவே உள்ள ஒரு சட்டத்தில் திருத்தம் செய்துள்ளார். கிரீன் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது முன்னர் கருதப்பட்ட கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுவது தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது இனி தேவையில்லை என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்தை பரிசீலிப்பதில் கவனம் செலுத்தப்பட்ட கோவிட்-19 அட்டை நீக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) கோவிட்-19 தடுப்பூசிக்கான ஆதாரத்தை வழங்குவதற்கான சட்டப்பூர்வ […]

வாழ்வியல்

உடல் எடையை வேகமாக குறைக்க காலையில் இதை செய்தால் போதும்

  • January 23, 2025
  • 0 Comments

உடல் பருமன் இன்றைய காலகட்டத்தில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை மூறை மற்றும் உணவுமுறை காரணமாக பலர் பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதில் உடல் பருமனும் முக்கியமான ஒரு பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக, தொப்பை கொழுப்பு (Belly Fat) வேகமாக அதிகரித்து விடுகிறது, ஆனால், அதை குறைப்பது அத்தனை எளிதல்ல. பலர் பல வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பிள்ளைகள் யாரிடம் பேசுகிறார்கள்? – பெற்றோர் கண்காணிக்க Instagramஇன் Teens Accounts

  • January 23, 2025
  • 0 Comments

Instagram சிங்கப்பூரில் Teens Accounts எனும் இளையர் கணக்குகளை அறிமுகம் செய்துள்ளது. Instagram தளத்தை நிர்வகிக்கும் Meta நிறுவனம் அதனை அறிவித்தது. 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்கள் அடுத்த சில மாதங்களில் இளையர் கணக்குகளில் வைக்கப்படுவர். எந்த வகை உள்ளடக்கங்களை இளையர்கள் பார்வையிடுகின்றனர், யாரெல்லாம் அவர்களைத் தொடர்புகொள்ளலாம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் கணக்கில் இடம்பெறும். அந்தக் கணக்குகள் அந்தரங்கமாக இருக்கும். தகாத வார்த்தைகள் தவிர்க்கப்படும். நாள்தோறும் ஒரு மணி நேரத்துக்கு மேல் செயலியைப் பயன்படுத்தினால் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

  • January 23, 2025
  • 0 Comments

இலங்கையின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளை, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும், வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

செய்தி வட அமெரிக்கா

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடு சீனா – கடுமையாக விமர்சித்த டிரம்ப்

  • January 23, 2025
  • 0 Comments

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடு சீனா என அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் விமர்சித்தார். இரண்டாவது நாள் அலுவலகப் பணியின்போது அளித்த பேட்டியில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய யூனியன் மிக மிக மோசமாக நடந்து கொள்வதாக அவர் சாடினார். அமெரிக்க தயாரிப்பு கார்களை ஐரோப்பிய யூனியன் நாடுகள் புறக்கணிப்பதாகவும், அமெரிக்க வேளாண் பண்ணையில் விளைவிக்கப்படும் பொருட்களையும் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தார்.

ஆசியா செய்தி

ஜப்பான் – பிலிப்பைன்ஸ் நாடுகளை உலுக்கிய நிலநடுக்கம்

  • January 23, 2025
  • 0 Comments

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை இன்று 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. நிலநடுக்கம் 4 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வகம் கூறியது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. பொருட்சேதமும் உயிருடற்சேதமும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இதேவேளை, பிலிப்பைன்ஸில் இன்று 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாகப் பிலிப்பைன்ஸின் எரிமலை, நிலநடுக்க ஆய்வு நிலையம் தெரிவித்தது. சேதமும் பின்னதிர்வுகளும் ஏற்படக்கூடும் என்று அது எச்சரிக்கை விடுத்தது. பொருட்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் […]

செய்தி விளையாட்டு

ஐசிசி தரவரிசை பட்டியல் முதலிடத்தில் தொடரும் பும்ரா

  • January 23, 2025
  • 0 Comments

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் ஜஸ்பிரீத் பும்ரா 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் (841) 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா (837) 3-வது இடத்திலும் உள்ளனர். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நோமன் அலி 761 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். […]