ஐரோப்பா

மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய அதிர்ச்சி தாக்குதல் – மூடப்பட்ட விமான நிலையங்கள்

  • May 6, 2025
  • 0 Comments

மொஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தொடர்ந்து இரண்டாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மொஸ்கோவின் நான்கு முக்கிய விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வெவ்வேறு திசைகளில் இருந்து வந்த 19 உக்ரேனிய ட்ரோன்கள், நகரத்தை அடைவதற்கு முன்பே அழிக்கப்பட்டதாக மொஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் தெரிவித்தார். நகரத்திற்குள் நுழையும் ஒரு பிரதான நெடுஞ்சாலையில் அவற்றின் சில இடிபாடுகள் விழுந்ததாகவும், ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் மேயர் […]

வட அமெரிக்கா

1963ஆம் ஆண்டு மூடப்பட்ட சிறையில் குற்றவாளிகளை அடைக்க டிரம்ப் திட்டம்

  • May 6, 2025
  • 0 Comments

1963ஆம் ஆண்டு மூடப்பட்ட சிறையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடைக்க அமெரிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அமெரிக்காவில் கொடூர குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை அடைப்பதற்காக, 1963ஆம் ஆண்டு மூடப்பட்ட அல்காட்ரஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சான் பிரான்சிஸ்கோ அருகே உள்ள தனி தீவில் இயங்கிவந்த சிறைச்சாலையில், முன்பு பல முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர். நிர்வாகச் செலவு அதிகரித்ததால் மூடப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப்பட்ட சிறைச்சாலையை விரிவாக்கம் செய்து மீண்டும் திறக்க உத்தரவிட்ட டிரம்ப், சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நடவடிக்கை […]

வட அமெரிக்கா

அமெரிக்காவின் படகு கவிழ்ந்து விபத்து – மூவர் மரணம் – 7 பேர் மாயம்

  • May 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழதுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஏழு பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் இருவர் சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. மீட்புப் பணிக்காகக் படகும் ஹெலிகாப்டரும் அனுப்பட்டன. 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படகில் 9 பேர் பயணித்துள்ளனர். அந்தப் படகு எங்கிருந்து வந்தது எங்கே செல்கிறது என்ற தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் படகில் இருந்தவர்களில் சிலர் இந்தியர்கள் என்று நம்பப்படுகிறது. காணாமல் போனவர்களைத் தேடி […]

இலங்கை

இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம்

  • May 6, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் 339 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, இன்று காலை 7.00 மணி முதல் 4 மணிவரை வாக்கெடுப்புக்கள் நடைபெறும். அதன்படி, இத்தேர்தல் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 17,156,338 ஆகும், மேலும் 25 நிர்வாக மாவட்டங்களில் 4877 உள்ளூராட்சி பிரிவுகளில் தேர்தல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 5783 நிலையங்களில் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறவுள்ளன.

விளையாட்டு

Playoff வாய்ப்பை இழந்தது ஹைதராபாத்

  • May 6, 2025
  • 0 Comments

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஹைதராபாத் அணி. ஹைதராபாத்தில் ராஜிவ் காந்தி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் கருண் நாயர், டுப்ளெஸிஸ் இருவரும் ஓப்பனிங் ஆடினர். இதில் கருண் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் 63 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன பெண் உயிருடன் வந்த அதிசயம்

  • May 6, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் 63 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன பெண் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 1962ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் திகதி ரீட்ஸ்பர்க் நகரிலிருந்து 20 வயதாக இருந்த போது ஆட்ரே பேக்கர்பேர்க் காணாமல்போனார். தற்போது அவருக்கு வயது 82 ஆகும். விருப்பப்பட்டுக் காணாமல் போனபோது பேக்கர்பேர்க்குக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தன. காணாமல் போவதற்குச் சில நாள்களுக்கு முன் தமக்குக் கொலை மிரட்டல் விடுத்த கணவருக்கு எதிராகப் பேக்கர்பேர்க் முறைப்பாடு செய்துள்ளார். காணாமல்போன நாளில் வேலையிடத்திலிருந்து […]

இலங்கை

இலங்கையில் நாளைய தினம் சில பாடசாலைகள் மூடல்

  • May 6, 2025
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் 7ஆம் திகதி சில பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கபப்பட்டுள்ளது. அரசாங்கம் வெளியிட்ட இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகள் தவிர்த்து , ஏனைய பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் காரணமாக நேற்றும் இன்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

18,000 வெளிநாட்டினர் விரைவில் வெளியேற்றும் ஐரோப்பிய நாடு

  • May 6, 2025
  • 0 Comments

ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் வசிக்கும் சுமார் 18,000 வெளிநாட்டினர் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களை வெளியேற்றப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 18 ஆம் திகதி போர்ச்சுகலில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்குள் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவர் என்று தெரிகிறது. போர்ச்சுகலில் வெளிநாட்டினருக்கு எதிரான கருத்துகள் பிரபலம் அடைந்துவருகின்றன. ஐரோப்பா முழுவதும் இப்போது வலசாரி அரசாங்கங்கள் வலுவடைந்துவருகின்றன. போர்ச்சுகலிலும் வலசாரி கட்சிகள் பிரபலமாகின்றன. சென்ற ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் வலசாரி சேகா கட்சி […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 65,000 பொலிஸார் கடமையில்!

  • May 6, 2025
  • 0 Comments

இலங்கையில் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நேற்று முதல் அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தேவையேற்படின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார். இதற்கமைய பொலிஸாரால் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது எவரேனும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் அவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

சூடானின் இனப்படுகொலை வழக்கை தள்ளுபடி செய்த ஐ.நா உயர் நீதிமன்றம்

  • May 5, 2025
  • 0 Comments

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி சூடான் தொடர்ந்த வழக்கை ஐ.நா.வின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சூடான் உள்நாட்டுப் போரில் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளை (RSF) ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரித்ததாக சூடான் குற்றம் சாட்டியது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர், மேலும் பலர் பஞ்சத்தை எதிர்கொண்டனர். இந்த குற்றச்சாட்டுகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டவட்டமாக மறுத்தது, இந்த […]

Skip to content