சிவன் ஆலாயம் இடிக்கப்பட்ட விவகாரம் – அருத்ட்தந்தை சக்திவேல் கண்டனம்!
சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வலி வடக்கு பிரதேச போர்த்துக்கீசர் கால மிக தொன்மை வாய்ந்த கீரிமலை சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டுள்ளது. இது இனவாத, மதவாத அரச பயங்கரவாதத்தினதும் அதற்கு துணை நிற்கும் இயந்திரமான இராணுவத்தினதும் கொடூர முகத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். […]