வட அமெரிக்கா

சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய தயாராகும் பில் கேட்ஸ்

  • May 10, 2025
  • 0 Comments

அடுத்த 20 ஆண்டுகளில் தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்யப்போவதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். தமது அறக்கட்டளையின் மூலம் அதனைச் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார். 2045ஆம் ஆண்டில் அறக்கட்டளையின் செயல்பாடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “என் இறப்பிற்குப் பிறகு பலர் என்னைப் பற்றி விமர்சிக்கக்கூடும். ஆனால் ஒரு போதும் நான் செல்வந்தராக இறந்தேன் என்று கூற வாய்ப்பு தரமாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார். 69 வயதாகும் பில் கேட்ஸ் இதுவரை சுமார் 100 பில்லியன் டொலரை […]

வாழ்வியல்

17 மணி நேரம் உணவு உட்கொள்ளாமல் இருப்பது புற்றுநோய் செல்களை அழிக்குமா?

  • May 10, 2025
  • 0 Comments

17 மணி நேரம் உண்ணாவிரதம் இருப்பது புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்று ஒரு சமூக ஊடக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். ட்விட்டர் (எக்ஸ்) இல் ஒரு பதிவின் படி, “13 மணிநேர உண்ணாவிரதத்திற்குப் பிறகு, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் அதிகரிக்கும், இது செக்ஸ் டிரைவ், தசை வலிமை மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இருப்பினும் இது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறது. 15 மணி நேரத்திற்குப் பிறகு, உண்ணாவிரதம் வளர்ச்சி […]

விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் அறிவித்த விராட் கோலி

  • May 10, 2025
  • 0 Comments

ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான அணி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து புதிய கேப்டனை நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. இதற்கிடையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

இந்தியா – பாகிஸ்தான் போர் அணு ஆயுதப் போராக மாறாது – அமெரிக்கா நம்பிக்கை

  • May 10, 2025
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் போர் அணு ஆயுதப் போராக மாறாதென அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில், அணு ஆயுதப் போராக மாற வாய்ப்பில்லை என்று, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், இரு நாடுகளின் போருக்கு நடுவே தலையிடுவது தங்கள் வேலையில்லை என்றும், இரண்டு நாடுகளையும் ஆயுதங்களை கீழே போடுங்கள் என்று அமெரிக்காவால் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இதை ராஜாங்க ரீதியாக அணுகவே அமெரிக்கா […]

அறிவியல் & தொழில்நுட்பம்

சில ஐபோன்களில் வாட்ஸ்அப் இனி வேலை செய்யாது!

  • May 10, 2025
  • 0 Comments

சமீபத்திய மாதங்களில் பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த வாட்ஸ்அப் பலபுதிய அப்டேட்களை வெளியிட்டு உள்ளது. இந்த புதுப்பிப்புகள் பயனர்களுக்கு அவர்களின் சாட்கள் மீது கூடுதல் கட்டுப்பாட்டை வழங்கவும், ஸ்பேம், மோசடிகள் மற்றும் தேவையற்ற குறுக்கீடுகளிலிருந்து அவர்களை பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முக்கிய மாற்றங்களில் ஒன்று கூடுதல் தனியுரிமை அடுக்குகளைச் சேர்ப்பது. இந்தப் புதிய அம்சங்கள் அரட்டைகள் மற்றும் குழுக்களில் இருந்து உரை, புகைப்படங்கள் (அ) வீடியோக்களை மற்றவர்கள் நகலெடுப்பதை கடினமாக்குகின்றன, இது முக்கியமான தகவல்களைப் பாதுகாக்க உதவும். […]

விளையாட்டு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

  • May 10, 2025
  • 0 Comments

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் துல்லியத் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதன் விளைவாக, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து, இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் காரணமாக இந்தியாவின் எல்லோயோர மாநிலங்கள் மின்சாரமின்றி இருளில் மூழ்கியது. பஞ்சாப் […]

இலங்கை

இலங்கையின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

  • May 10, 2025
  • 0 Comments

இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடனான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலும் மற்றும் புத்தளம், காலி, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் […]

ஆசியா

சிங்கப்பூரில் இலஞ்சம் வழங்கிய வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

  • May 10, 2025
  • 0 Comments

சிங்கப்பூரில் இலஞ்சம் வழங்கிய இந்திய நாட்டவருக்கு 15,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் ஏழுமலை என்பவர் தனது நிறுவனத்திற்கு குத்தகை ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக காண்டோமினிய கூட்டுரிமை மேலாளருக்கு தொடர்ச்சியான இலஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆவணங்களின்படி, அவர் காண்டோமினிய கூட்டுரிமை வீட்டின் வாகனம் செல்லும் பாதைக்கான தரை கற்களை மாற்றுவதற்கான டெண்டர் என்னும் குத்தகையை பெற்றுள்ளார். ஆனால், டெண்டர் பணிகள் முடிந்த ஒரு வாரத்திலேயே அந்த வாகனப் பாதையில் இருந்து வண்ணப்பூச்சு உரிந்து வர தொடங்கியதாகவும், மேலும் […]

இந்தியா

தொடரும் பதற்றம் – டெல்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் இரத்து

  • May 10, 2025
  • 0 Comments

டெல்லி விமான நிலையத்தில் 2 நாட்களில் 228 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் சேவையில் ஈடுபடவிருந்த 288 விமானங்கள், கடந்த இரண்டு நாட்களில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பதற்றநிலையை தொடர்ந்து இவ்வாறு விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், பிகானீர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் இன்று நள்ளிரவு வரை நிறுத்தி வைப்பதாக இந்தியாவின் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. […]

இலங்கை செய்தி

DeepSeek பயன்படுத்த ஊழியர்களுக்கு தடை விதித்த மைக்ரோசாப்ட்

  • May 10, 2025
  • 0 Comments

தரவு பாதுகாப்பு காரணங்களுக்காக சீன செயலியான DeepSeekயை பயன்படுத்த மைக்ரோசாப்ட் ஊழியர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர். மைக்ரோசாப்ட் துணைத் தலைவரும் தலைவருமான பிராட் ஸ்மித் செனட் விசாரணையில் இது குறித்து தெரிவித்துள்ளார். பல நிறுவனங்கள் மற்றும் நாடுகள் கூட டீப்சீக்கில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், மைக்ரோசாப்ட் இதுபோன்ற தடையை பகிரங்கமாக அறிவித்தது இதுவே முதல் முறையாகும். தரவு சீனாவில் சேமிக்கப்படும் அபாயம் மற்றும் டீப்சீக்கின் பதில்கள் சீன பிரச்சாரத்தால் பாதிக்கப்படலாம் என்ற ஆபத்து காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக […]

Skip to content