இலங்கை முழுவதும் நீர் தடை ஏற்படும் அபாயம் – விடுக்க்பபட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை பூராகவும் நீர் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்த நடவடிக்கை எடுப்போம் என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தை பாரிய போராட்டமாக மாற்றி, நீர் விநியோக நடவடிக்கையை இடைநிறுத்துவோம் என நீர்வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆரம்பித்திருக்கும் தொழிற்சங்க போராட்டம் தொடர்பாக அதன் இணை அமைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார். சுகயீன விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் அந்த தினங்களில் பணியாற்றியமைக்கான கொடுப்பனவை 10 நாட்களுக்குள் வழங்குமாறு எமது தொழிற்சங்கம் கடந்த […]