இலங்கை செய்தி

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு நடவடிக்கை – அமைச்சர் சப்ரி

  • April 12, 2023
  • 0 Comments

மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அமைச்சரவை உபகுழு உருவாக்கப்பட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை என அமைச்சர் குறிப்பிட்டார். தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை என கூறினார். இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளக பொறிமுறையை நிறுவுவதே உபகுழுவின் மூன்றாவது […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் காதல் மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

  • April 12, 2023
  • 0 Comments

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் 5 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இச் சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் போது காயமடைந்த கர்ப்பிணி உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கர்பிணிப் பெண்ணின் கணவரை கைது […]

இலங்கை செய்தி

தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையில் உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க ஆலோசனை

  • April 12, 2023
  • 0 Comments

தொழிற்சந்தையின் தேவைக்கு ஏற்ற வகையில் உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் விஸ்தரிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில், இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர்  ஜனாதிபதி சட்டத்தரணி (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் கூடிய குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இதில் உயர்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். உயர்தரப் பரீட்சையின் பின்னர் கல்வியை இடைநடுவில் கைவிடும் மாணவர்களுக்கான உயர் கல்வி […]

இலங்கை செய்தி

குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம்

  • April 12, 2023
  • 0 Comments

அரசாங்கத்தினால் 2022/23 பெரும்போக விளைச்சலில் நெல் கொள்வனவு செய்தல் மற்றும் குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு அரிசி பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய நெல் கொள்வனவு செய்தல் மற்றும் பகிர்ந்தளிப்பதில் காணப்படும் பிரதான மூன்று சிக்கல்கள் இனங்காணப்பட்டன. நெல் உற்பத்தி செய்யப்படாத மாவட்டங்களுக்கு அரிசி விநியோகம் செய்யும் போது ஏற்படும் தாமதம் […]

இலங்கை செய்தி

மரணப் பொறியாக மாறிய உலகின் மிக விலையுயர்ந்த பங்களா;வேதனையில் வீட்டின் உரிமையாளர்

  • April 12, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சமீபத்தில் உலகின் மிக விலையுயர்ந்த பங்களாவை வாங்கிய நபர், அதனை ஒரு மரண பொறி என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாம் கிளான்ஃபீல்ட் எனும் 44 வயது பிரித்தானியர், கடந்த மார்ச் மாதம் 13.5 மில்லியன் பவுண்டுகளை (இலங்கை பணமதிப்பில் ரூ. 536 கோடி) கொடுத்து டோர்செட்டின் சாண்ட்பேங்க்ஸ் ரிசார்ட்டில் உள்ள நார்த் ஹேவன் பாயிண்ட் பங்களாவை வாங்கினார். இங்கிலாந்தின் தெற்கில் உள்ள இந்த இடம் கடலோர ரியல் எஸ்டேட்டின் உலகின் மிக விலையுயர்ந்த பகுதியாக […]

இலங்கை செய்தி

மத்திய வங்கியில் காணாமல்போன 5 மில்லியன் ரூபா குறித்து விசாரணை!

  • April 12, 2023
  • 0 Comments

மத்திய வங்கியிலிருந்து காணாமல்போன 5 மில்லியன் ரூபா தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து காணாமல்போன குறித்த பணம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மத்திய வங்கியும் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் 5 மாத கர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கி சூடு நடத்திய கணவன்!

  • April 12, 2023
  • 0 Comments

டும்பத்தகராறு காரணமாக ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி மீது கணவன் துப்பாக்கி சூடு மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மனைவி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார். அக்கராஜன் குளம் காவல்துறை பிரிவுக்குற்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 […]

செய்தி வட அமெரிக்கா

உலகின் முதல் 3டி-அச்சிடப்பட்ட ராக்கெட் கலிஃபோர்னியாவில் அறிமுகம்

கலிஃபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் உருவாக்கிய 3D-அச்சிடப்பட்ட ராக்கெட், உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதற்கான அமெரிக்க நிறுவனத்தின் புதிய உத்தியின் முக்கிய சோதனையில் சுற்றுப்பாதையில் அதன் முதல் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. 35-மீட்டர் (115-அடி) டெர்ரான் 1 ராக்கெட், இதில் 85 சதவீதம் 3டி பிரிண்டரில் இருந்து தயாரிக்கப்பட்டது, கிழக்கு நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கனாவரலில் உள்ள அமெரிக்க விண்வெளிப் படையின் தள ஏவுதளத்தில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது. ரிலேட்டிவிட்டி ஸ்பேஸின் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மசாஜ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த கதி

  • April 12, 2023
  • 0 Comments

கந்தானை பகுதியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்கு சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர் நேற்று நள்ளிரவு மசாஜ் நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் இன்று காலை அந்த நபர் அங்கு உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

இலங்கை செய்தி

சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார்

  • April 12, 2023
  • 0 Comments

வவுனியா மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரை ஆசிரியராகவும் செயற்பட்டுவந்த பொன்னையா மாணிக்கவாசகம், நள்ளிரவு 12.40 மணி அளவில் இம்மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு எம்மிடமிருந்து விடைபெற்றார். அன்னார் நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில் குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இடம்பெற்ற யுத்த மோதல்கள் குறித்து தமது உயிரையும் பொருட்படுத்தாமல் செய்தி சேகரித்து சர்வதேசமெங்கும் மக்கள் எதிர்கொண்ட துன்பங்களை வெளிப்படுத்திவந்தார். அன்றைய நாட்களில் இரவு 9.15 மணிக்கு ஒலிபரப்பாகும் பிபிசியின் […]

Skip to content