பிரான்ஸில் பாரிய விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து – பலர் காயம்
பிரான்ஸில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தனர். Isère மாவட்டத்தில் உள்ள Corp எனும் சிறு நகரில் இவ்விபத்து இடம்பெற்றது. 40 மாணவர்கள் மற்றும் 6 பெரியவர்களுடன் பயணித்த பேருந்து ஒன்று காலை 9 மணி அளவில் வீதியில் இருந்து வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்ளிட்ட 21 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். […]