வட அமெரிக்கா

இரண்டாவது பெரிய இராஜதந்திர பயணமாக சவுதி அரேபியா வந்துள்ள ட்ரம்ப்!

  • May 13, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில் முதல் பெரிய இராஜதந்திர பயணமாக சவுதி அரேபியா வந்தடைந்தார். அமெரிக்க அதிபரை சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க புதிய முதலீடுகளைப் பெற நம்புவதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. […]

இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற மற்றுமோர் கோர விபத்து – 20 பேர் படுகாயம்!

  • May 13, 2025
  • 0 Comments

யாத்திரை சென்ற பேருந்து ஒன்று சாலையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலதெனியவின் யடிஹலகல பகுதியில் நேற்று (12) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் பாரிகம, கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை

யாழில் 6 வயது மகளுக்கு உணவில் விசத்தைக் கலந்து கொடுத்த தந்தை

  • May 13, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தந்தையொருவர் அவரது 6 வயது மகளுக்கு உணவில் விசத்தைக் கலந்து கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – இளவாலை – உயரப்புலம் பகுதியிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தந்தை விசம் கலந்த உணவைச் சிறுமிக்கு வழங்க முற்பட்ட போது அவரது தாய் அதனைத் தடுத்துள்ளார். எனினும், சிறுமிக்கு விசம் கலந்த உணவு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது தாய் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி […]

ஆசியா

பாகிஸ்தானில் அணு ஆயுத சோதனையால் நில நடுக்கமா? தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் விளக்கம்

  • May 13, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் சில பகுதிகளில் நேற்றைய லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இது சாதாரண நிலநடுக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இர் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்டதல்ல என தேசிய நில அதிர்வு ஆய்வு மைய இயக்குநர் ஓ.பி.மிஸ்ரா தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பிா் ஜங்கல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.6 அலகுகளாக பதிவானதாகவும் அவா் கூறினாா். இது கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கமாகும். முன்னதாக, கடந்த 10-ஆம் […]

செய்தி

அமெரிக்கா, சீனா முடிவால் பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட மாற்றம்

  • May 13, 2025
  • 0 Comments

அமெரிக்காவும் சீனாவும் அவற்றின் வரித்திட்டங்களை 90 நாள்களுக்கு ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து பங்குச்சந்தைகள் மீட்சி கண்டுள்ளன. வரி ஒத்திவைப்பு மக்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை ஏற்படும் சாத்தியம் தற்போது குறைவாக இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லந்தின் ஜெனீவா (Geneva) நகரில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமெரிக்காவும் சீனாவும் அவற்றின் வரித்திட்டங்களை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டன. சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் மீதான வரியை 145 சதவீதத்தில் இருந்து 30 சதவீதம் வரை […]

ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவை உலுக்கிய கனமழை – வெள்ளத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலி

  • May 13, 2025
  • 0 Comments

  ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெற்கு கிவு மாகாணத்தில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக நங்கன்ஜா நகரில் உள்ள டாங்கன்யிகா உள்பட பல ஏரிகள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்ததால் ஏரியின் கரை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கரையோரம் அமைந்துள்ள கசாபா கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 150 வீடுகள் சேதமடைந்துள்ளது. அப்போது வெள்ளப்பெருக்கு மற்றும் […]

விளையாட்டு

ஐபிஎல் போட்டிகள் மே 17 முதல் மீண்டும் தொடக்கம்

  • May 13, 2025
  • 0 Comments

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் பஞ்​சாப் – டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டம் தரம்​சாலா​வில் நடை​பெற்று கொண்​டிருந்​தது. 10.1 ஓவர்​களில் இந்த ஆட்​டம் நிறுத்​தப்​பட்டு மைதானத்​தில் இருந்த ரசிகர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர். இதைத் தொடர்ந்து […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானிய பெண்ணொருவர் கைது

  • May 13, 2025
  • 0 Comments

பிரித்தானிய பெண்ணொருவர் சுமார் 46 கோடி ரூபாய் பெறுமதியுடைய குஷ் ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று மாலை கைதாகியுள்ளார். தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது விமான நிலைய வரலாற்றில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய குஷ் ரக போதைப்பொருள் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில், குறித்த பெண்ணை சோதனையிட்டுள்ளனர். தாய்லாந்தின் பெங்காக்கிலிருந்து ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone 17 – வாடிக்கையாளர்களை அசர வைக்கும் சிறப்பு அம்சங்கள்

  • May 13, 2025
  • 0 Comments

ஆப்பிள் ஐபோன் 17 மாடலில் குறிப்பிடத்தக்க வகையில், ஏ19 பயோனிக் சிப் மூலம் இதன் செயல்திறனை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஏஐ தொழில்நுட்பம், வேகம் மற்றும் பேட்டரி ஆயுளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் ஸ்மார்போனான ஐபோன் 17 தொடர் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெக் எக்ஸ்பர்ட்களும் ஐபோனின் டிசைன் மற்றும் அதில் இடம்பெறவிருக்கும் முக்கிய அம்சங்கள் குறித்து அவ்வப்போது சுவாரஸ்யமான தகவல்களை […]

ஆஸ்திரேலியா

விண்வெளி சாதனைக்கு தயாராகும் ஆஸ்திரேலியா

  • May 13, 2025
  • 0 Comments

விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு சாதனை தருணத்திற்கு ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. வியாழக்கிழமை காலை கில்மோர் ஸ்பேஸ் தனது முதல் எரிஸ் ரொக்கெட்டை விண்வெளியில் செலுத்தத் தயாராகி வரும் வேளையில் அது நிகழ்ந்துள்ளது. இது வெற்றியடைந்தால், ஆஸ்திரேலியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் ராக்கெட் சுற்றுப்பாதையை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சிக்கலான பொறியியல் சாதனையை அடையும் உலகின் 12வது நாடாக ஆஸ்திரேலியா மாறும். கில்மோர் ஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஆடம் […]

Skip to content