ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

  • April 16, 2023
  • 0 Comments

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித உரிமை செயற்பாடு, இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பான செயற்பாடு, குடிவரவு குடியழ்வு செயற்பாடுகளில் தமிழர்களுக்கு முழு ஆதரவை வழங்கி வரும் சுஜன் செல்வன் சிட்னி மாநில தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளார்.அதன்படி புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிக தமிழர்களைக் கொண்டுள்ள அவுஸ்திரேலியா மாநிலத்தில் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் சுஜன் செல்வன் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

  • April 16, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000 பேர் நிரந்தர விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதியை பெறுவார்கள் என அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. முன்னைய அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருப்பவர்கள் பத்து வருட துயரங்களை அனுபவித்துள்ளனர் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏனைய 12000 குடியேற்றவாசிகளின் நிலை என்னவென இன்றைய ஆர்ப்பாட்டத்தில் […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் அமுலாகும் புதிய நடைமுறை?

  • April 16, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சமூக வலைதளங்கள் தொடர்பான ஒரு நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. ஒருவர் பற்றிய தவறான தகவல்களை அல்லது அவதூறுகளை சமூக வலைதளங்களில் பதிந்தால் அவர்கள் தண்டிக்கப்பட கூடிய சட்டமாக இந்த சட்டம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் சமூக வலைதளங்களில் ஒருவர் இன்னொருவர் பற்றி அவதூறான பிரச்சாரங்களை மேற்கொள்வதை தடை செய்வதற்காக புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு ஜெர்மனியினுடைய ஆளும் கூட்டு கட்சிகள் இப்பொழுது திட்டமிட்டுள்ளது. இதுவரை காலங்களிலும் சமூக வலைதளங்களில் உள்ள ஒருவர் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் கட்டிடத்தின் 6வது தளத்தில் இருந்து விழுந்து சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை பிற்பகல் இச்சம்பவம் பரிஸ் 3 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவன் ஒருவனே கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இருந்து விழுந்துள்ளார். அதே கட்டிடத்தில் வசிக்கும் விடுமுறையில் இருந்த தீயணைப்பு படை வீரர் ஒருவர் உடனடியாக சக அதிகாரிகளை அழைத்தது. அத்துடன், முதலுதவி சிகிச்சைகளையும் ஆரம்பித்தார். இருந்தபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை. […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் நீண்ட நாள் சர்ச்சைக்கு கிடைத்த தீர்வு!

  • April 16, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் போதை பொருள் வைத்திருக்கலாமா என்ற கேள்வி பல நாட்களாக எழுந்து வந்துள்ள நிலையில் தற்போது அது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேள்விக்கு ஜெர்மனியின் சமஷ்டி சுகாதார அமைச்சர்   ஆலோசனை வழங்கியுள்ளார். ஜெர்மனியில் கஞ்சா என்று கூறப்படுகின்ற போதை பொருளை சட்ட ரீதியான முறையில் கொள்வனவு செய்ய முடியுமா அல்லது சட்ட ரீதியான முறையில் இந்த போதை பொருளை வைத்திருக்க முடியுமா என்பது பற்றிய விவாதங்கள் பல நாட்களாக  இடம்பெற்று வந்துள்ளன. அதாவது சில பொது […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

  • April 16, 2023
  • 0 Comments

பிரான்ஸின் 61 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அச்சுறுத்தும் ஒவ்வாமை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவகால மகரந்த ஒவ்வாமை இவ்வருடமும் பிரான்சை பீடித்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்து்ளளனர். அதற்கமைய, தற்போது  இல் து பிரான்ஸ் மாகாணம் முழுவதும் இந்த மகரந்த ஒவ்வாமை பரவியுள்ளதாக சுகதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த மாகாணங்கள் முழுவதும் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பிரான்ஸின் 90 சதவீத நிலப்பரப்பு இந்த ஒவ்வாமைக்குள் சிக்கியுள்ளது. ஒவ்வாமை […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் ஐன்ட்ரீ பந்தயத்தை தாமதப்படுத்திய போராட்டங்களில் 118 பேர் கைது

  • April 16, 2023
  • 0 Comments

கிராண்ட் நேஷனலுக்கு இடையூறு விளைவித்ததற்காக 118 பேரை போலீசார் கைது செய்தனர், இது விலங்கு உரிமை ஆர்வலர்கள் ஐன்ட்ரீயில் உள்ள பாடத்திட்டத்திற்கு செல்வதன் மூலம் பந்தயத்தை தொடங்குவதை தாமதப்படுத்தியது. மெர்சிசைட் போலீசார் பாதையில் நுழைந்த ஒன்பது பேரை கைது செய்தனர். குற்றச் சேதம் மற்றும் பொதுத் தொல்லை குற்றங்கள் ஆகிய இரண்டிற்காக மொத்தம் 118 கைது செய்யப்பட்டதாக அவர்கள் பின்னர் தெரிவித்தனர். பந்தயத்திற்கு முன் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் M57 ஐத் தடுத்து நிறுத்திய போராட்டம் தொடர்பான […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் விலங்கு உரிமை திட்டம் தொடர்பாக மூவர் கைது

  • April 16, 2023
  • 0 Comments

புகழ்பெற்ற கிராண்ட் நேஷனல் குதிரைப் பந்தயத்தை சீர்குலைக்க விலங்குகள் உரிமை ஆர்வலர்களின் திட்டம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேரும் பொது தொல்லைகளை ஏற்படுத்த சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வடமேற்கு இங்கிலாந்தின் லிவர்பூலுக்கு அருகில் உள்ள ஐன்ட்ரீ பந்தய மைதானத்திற்கு வெளியே புகழ்பெற்ற ஸ்டீபிள்சேஸ் நடைபெறும் இடத்தில் போராட்டம் நடத்திய 25 வயதுடைய ஒரு பெண்ணும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டனர். முன்னதாக , கிரேட்டர் மான்செஸ்டர் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்குமாறு உலக வங்கிக்கு உக்ரைன் ஜனாதிபதி வேண்டுகோள்!

  • April 16, 2023
  • 0 Comments

ரஷியா தனது அராஜகத்திற்கான முழு விலையை உணர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசும்போது சர்வதேச நாணய நிதியகம் மற்றும் உலக வங்கிகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார். அதில்  உலகம் முழுவதும் உள்ள ரஷியாவின் மத்திய வங்கியின் சொத்துகள்  நிதிகளை முடக்க வேண்டும் என்றும் அவற்றை கொண்டு உக்ரைனை மறுகட்டமைப்பு செய்ய உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். உக்ரைனில் ஏற்பட்டு உள்ள இழப்புகளை […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் தானிய இறக்குமதிக்கு தடை விதித்தது போலந்து!

  • April 16, 2023
  • 0 Comments

உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும்  தானியங்கள், மற்றும் உணவு இறக்குமதியை போலந்து தடை செய்துள்ளது. போலந்து தனது விவசாயத் துறையைப் பாதுகாக்க மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பெரிய அளவிலான உக்ரேனிய தானியங்கள், ஐரோப்பிய ஒன்றியத்தில் உற்பத்தி செய்யப்பட்டதை விட மலிவானவையாகும். இருப்பினும் அவை உள்ளுர் விவசாயிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது தேர்தலிலும் தாக்கம் செலுத்தியுள்ளது. இதன்காரணமாக தானியங்கள், மற்றும் உணவு இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிகாரி ஒருவர்,  […]