இலங்கையில் குறைந்த விலையில் தேனீர் வழங்கவில்லை என்றால் புகைப்படம் அனுப்புமாறு அறிவிப்பு
இலங்கையில் சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் விற்கப்படும் கொத்து ரொட்டி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகளை 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிளேன் டீயின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களது சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இம்மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி 100 ரூபாவாக […]